க்ரந்தங்கள் (granthams)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q and A Video responses

Q. கோவிந்த/நாராயண நாமங்கள் ரக்ஷிப்பது எவ்வாறு என்று விளக்கவும். (How do gOvindha/nArAyaNa names protect us?)

https://www.youtube.com/watch?v=ApmuNBJEMWs

Q. ஸந்தை சொல்வது எப்படி? அதன் பலன் என்ன? (How to learn santhai? What is its benefit?)

https://youtu.be/1KBzl2t_hmk?si=lvqZsii4BS3Uoly6

Q. இராமானுச நூற்றந்தாதியை எல்லாரும் சொல்லலாமா? இதைச் சொல்லுவதனால் என்ன பலன்? (Can everyone recite rAmAnusa nURRandhAdhi? What is the benefit of reciting it?)

https://youtube.com/shorts/FLsaqli8i-8?si=38dbEkj9dbU10ETc


Q and A Text responses

Q. முமுக்ஷுப்படி சூத்திரம் 185 விளக்கத்தின்படி, சுயமாகச் செய்யப்படும் உபாயங்கள் ஈஸ்வரனுக்கு சரீரமான ஆத்மாவின் ஸ்வரூபத்துக்கு ஏற்காதவை என்று அர்ஜுனன் அறிந்தான்; அதாவது அவனுக்கு ஸ்வரூப ஞானம் உண்டு. ஆனால் சூத்திரம் 198 விளக்கத்தில், அர்ஜுனன் மயங்கியிருந்ததால் தான் கிருஷ்ணன் “தர்ம” என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இவ்விரண்டும் முரணாகத் தோன்றுகிறது. தயவுசெய்து விளக்கவும்.

அடிப்படையில் ஸ்வரூப ஞானம் இருந்தாலும் ஓரொரு ஸமயத்தில் மயக்கம் ஏற்படலாம் என்பது தாத்பர்யம்.

Q. 185 மற்றும் 188 சூத்திரங்கள் சம்பந்தப்பட்ட கேள்வி. 185 சூத்திரம் மற்றும் விளக்கத்தில் மற்ற உபயங்கள் உடல் ரீதியாக அதிக சிரமம் உள்ளது என்று கூறப்படுகிறது. 188 சூத்திரம் விளக்கத்தில் “மற்ற தர்மங்களை கடைபிடிப்பதில் உள்ள சிரமம் அர்ஜுனனுக்கு உள்ளது என்பதை உணர்த்தி, அதன் பின்னரே ஸித்த உபாயத்தை கண்ணன் கூறுகின்றான் – என்னும் இந்த வாதம் தள்ளபடுகிறது” இவை இரண்டும் முரண்பாடு போல் தோன்றுகிறது. தயவு கூர்த்து விளக்கம் அளிக்கவும்.

இவைகள் இயற்கையாகவே ஸ்வரூப விரோதத்தினாலே விடப்பட வேண்டும் என்பதால், ச்ரமத்தைப் பார்த்து விடச்சொன்னது முக்யமான காரணம் இல்லை என்பது சொல்லப்படுகிறது. அர்ஜுனன் சோகித்தது அவற்றின் கஷ்டத்தினாலே. கண்ணன் விடச்சொன்னது அவை ஸ்வரூப விரோதமாகையாலே.