ஆசௌசம் (தீட்டு) (ASoucham (theettu))

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q and A Video responses

Q. தீட்டுக்காலத்தில் திருமண்/ஸ்ரீசூர்ணம் இடலாமா? (Shall we apply thirumaN/SrIchUrNam during theettu (ASoucham)?) 

https://youtu.be/NUsCl42WXA4

Q. தீட்டு காலங்களில் பாசுர அநுஸந்தான முறை – விளக்கம் தரவும் (Explain what and how to meditate upon during ASoucham)

https://youtu.be/n_qjnshU4_w


Q and A Text responses

Q. சாமி என்னுடைய அப்பா இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது சாமி ஆனால் அவர் துவாதசி திதி அவிட்டம் நட்சத்திரம் (அடைப்பு) இறந்திருக்கிறார். அதனால் வீட்டில் சாமி அறை திறக்கக்கூடாது, ஜெபம் செய்ய கூடாது, நாலாயிர திவ்யபிரபந்தம் (6மாதத்திற்கு) படிக்க கூடாது. கொடிமரம் உள்ள கோவிலுக்கு ஒரு வருடம் போகக் கூடாது. கொடிமரம் இல்லாத கோவிலுக்கு ஆறு மாதம் போகக் கூடாது.மலை கோவிலுக்கு போக கூடாது. கோவில்களுக்கு கைங்கரியம் செய்ய கூடாது. என்று சொல்றாங்க சாமி இப்ப நான் என்ன சாமி செய்ய வேண்டும். (நான் இன்னும் பஞ்சசம்ஸ்காரம் வாங்கவில்லை சாமி ஆனால் நான் ஸ்ரீவைஷ்ணவ வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கிறேன் சாமி]?

காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு தீட்டு கிடையாது. அதற்குப் பிறகு இவை எல்லாம் செய்யலாம். ஒரு தவறும் இல்லை. மற்றவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கவும்.

Q. ஸ்ரீ கள் தீட்டு காலத்தில் பெருமாள் பிரசாதம் ஆன லட்டு அப்பம் சாப்பிடலாமா?

Yes.

Q. என் உறவினர் ஒருவர் நேற்று இயற்கை எய்தினார்.. அவரின் ஈம சடங்கு 16 ஆம் நாள் நடந்த வேண்டும் ஆனால் மார்கழி மாதம் பிறந்துவிடுகிறது. மார்கழி மாதம் நடப்பு மற்றும் காரியம் ஆகியவற்றை நடத்தலாமா? அல்லது அதற்கு முன்னதாகவே முடிக்கவேண்டுமா? 

நடத்தலாம். மார்கழி மாதம் என்பதால் எந்தத் தடையும் இல்லை.

Q. அசௌச்சமின் போது திருமான் பயன்படுத்துவதற்கான விதிகள் என்ன?

ஆசௌச காலத்திலும் திருமண் தரிக்க வேண்டும். திருமண் இல்லாமல் ஸ்ரீவைஷ்ணவர்கள் (ஆணும் பெண்ணும்) இருக்கவே கூடாது. ஆனால் தீட்டு காலத்தில் ஸ்ரீசூர்ணம் தரிப்பதில்லை.

Q. அசௌச்சத்தின் போது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாமா?

பாராயணங்கள் செய்யக் கூடாது. மனதுக்குள் சொல்லிக்கொள்ளலாம். வாய் விட்டுச் சொல்லக்கூடாது. க்ரந்தங்களைத் தொடக் கூடாது.

Q. இறப்பு தீட்டு காலத்தில்.பகவத் கீதை படிக்கலாமா?

No.

Q. ஏதாவது ஒரு துக்க நிகழ்வுகளில் குடும்பத்தில் யாராவது பங்கேற்கும்போது அந்த சமயத்தில் மற்றவர்கள் சன்னதிக்கு செல்லலாமா?

மற்றவர்களுக்குத் தீட்டு இருந்தால் போக முடியாது. இல்லை என்றால் போகலாம்

Leave a Comment