வர்ணாஶ்ரம தர்மம் (varNASrama dharmam)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q and A Video responses

Q. ஶாஸ்த்ரம் குறிப்பிடும் வர்ணாஶ்ரம தர்மம் – விளக்கம் தரவும் (Please explain varNASrama dharmam as mentioned in SAsthrAs)

https://youtu.be/p5VncxRcH24

Q. பக்தி யோகம் பண்ணுவதற்கு, த்ரை வர்ணிகர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் அதிகாரம் கிடையாது? (Why those who are other than thraivarNikas are not qualified for bhakthi yOgam? 

https://youtu.be/fvsHcqJCoww

Q. வேதத்தை கற்றுக்கொள்ளும் அதிகாரம் எவ்வர்ணத்தவர்க்கு உண்டு? வேதத்தைக் கற்றுக் கொள்ளாதவர்க்கு மோக்ஷம் கிடையாதா? (Who has the eligibility to learn vEdham? Will those who cannot learn, not get mOksham?) 

https://youtu.be/4mgZVMprXjU


Q and A Text responses

Q. நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒருவரை ஒரு பிராமணர் ஸ்வீகாரம்  எடுத்துக் கொண்டால் (முறையாக ஹோமம் வளர்த்து, ஸ்வீகார சம்பிரதாயப்படி)  அதன் பின்னர் அவருக்கு முறையாக பிரம்மோபதேசம் செய்வித்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கலாமா?

அது முடியாது. ப்ராஹ்மண குலத்தில் இருக்க வேண்டும். அதுவும் ஒரே கோத்ரத்தில் இருப்பது உசிதம்.

Q. ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற அனைவரும் ஏன் பூணூல் அணியவில்லை? சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் இராமானுஜ தாசர்கள் என்ற நிலையில், முறையாக சம்ப்ரதாயத்தை பின்பற்றி வாழும் எவருக்கும் பூணூல் அணியும் உரிமை உள்ளதா?

வர்ணம் என்பது உடம்பு சார்ந்தது. அது உடம்பு உள்ளவரை மாறாது. அதே சமயம், அடியார்களுக்குள் வர்ணத்தின் அடிப்படையாக ஏற்றத்தாழ்வு கொள்ளக்கூடாது என்பதும் உண்மை.

Q. வர்ணக்கலப்பு திருமணங்கள் நடந்துவிட்டால், பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து விட்டால் பாவம் போய்விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அது உண்மையா?

பஞ்ச ஸம்ஸ்காரம் என்பது மோக்ஷத்தைப் பெற்று நித்ய கைங்கர்யம் செய்வதற்கு. இன்மேல் நாம் ஆசார்யன் வழிகாட்டுதலின் படி, தர்ம மார்க்கத்தில் வாழ்ந்தால், அந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு. பொதுவாக நாம் செய்துள்ள, செய்கிற மற்றும் செய்யப் போகிற எல்லாத் தவறுகளுக்கும் சரணாகதி என்பது ஒரே ப்ராயச்சித்தமாகச் சொல்லப்பட்டாலும், அது மோக்ஷத்துக்குத் தடைகளை விலக்குமே தவிர, இவ்வுலகில் சாஸ்த்ர மீறுதலுக்கான விளைவுகளைப் போக்காது. வர்ணக் கலப்பு முதலியவைகளுக்கு இவ்வுலகில் நிவாரணம் என்பதே கிடையாது.