திருவாராதனம்  (thiruvArAdhanam)

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

Q. புருஷர்கள் இல்லாத க்ருஹத்திலே சாளக்ராம திருவாராதனம் யார் பண்ணலாம்? (Who can perform thiruvArAdhanam for SAlagrAmap perumAL at home, when men are not present?) 

https://youtu.be/CQXhYv_YdXw

Q. சாயங்காலம் எத்தனை மணிக்குள் திருவாராதனம் பண்ண வேண்டும்? (Before what time, thiruvArAdhanam should be performed in the evening?) 

https://youtu.be/HF01ujUCMTY

Q. சாளக்ராம பெருமாளை ஜலத்திலே எழுந்தருளப் பண்ணலாமா? (Can we place SAlagrAmap perumAL in water?) 

https://youtu.be/dCOeXbibHKw

Q. வெளிநாடு போகும் பொழுது சாளக்ராமப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போகலாமா? (Can we carry SALagrAmap perumAL with us while travelling abroad?) 

https://youtu.be/qLrEgJCz40U

Q. சாளக்ராமப் பெருமாளுக்கு எப்படி கண்டருளப் பண்ண வேண்டும்? (How to offer food (naivEdhyam) for SALagrAmap perumAL at home?) 

https://youtu.be/esLWPMMkUSg

Q. க்ருஹங்களில் எம்பெருமானின் திருவாராதன விக்ரஹத்தின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும்? (What should be the size bhagavAn’s vigrahams at home?) 

https://youtu.be/DXuraFT8uqg

Q. சாளக்ராமப் பெருமாளைப் தனம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாமா? (Can we purchase SALagrAmap perumAL for a price?) 

https://youtu.be/yxib0NezhTY

Q. சாளக்ராமப் பெருமாளை எப்படிப் புதிதாக எழுந்தருளப் பண்ணுவது? (How to instill sALagrAma perumAL at home for the first time?) 

https://youtu.be/im6iA5K_zx0

Q. சாளக்ராம திருவாராதனத்தால் என்ன பலன்? (What is the benefit of doing thiruvArAdhanam to SALagrAmap perumAL?)

https://youtu.be/rjGIaiEF2yo

Q. திருவாராதன க்ரமம் செய்முறை விளக்கம் சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தரவும். (Please explains thiruvArAdhana kramam in simple terms to be understood by all) 

https://youtu.be/RxAkx54xgkc

Q. பெருமாளுக்குக் கண்டருளப்படாத உணவை திருவாராதனம் முடியும் முன்பே கொடுத்து அனுப்பலாமா? (Is it acceptable to send food to office goers/ school goers before offering it to emperumAn?) 

https://youtu.be/_r5iQca_2pY

Q. பெருமாளுக்கு ஸமர்ப்பித்த தீர்த்த ப்ரஸாதம் மீந்திருந்தால் மறுநாள் என்ன பண்ணுவது? (What can do done with perumAL thIrtham if it gets left over from previous day?) 

https://youtu.be/wGGvWzZvNsQ

Q. எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய எட்டு வகை புஷ்பங்கள் எவை? (What are the eight types of flowers that should be offered to emperumAn?)

https://youtu.be/T30BfDCQw2c?si=wAemscB-2RjTv0Ue

Q. ஆகம கோயில்களில் திருவாராதனம் யார் பண்ண வேண்டும்? கிராமங்களில் உள்ள கோயில்களில் யார் பண்ணலாம்? (Who can perform pUjA in Agama temples? Who can perform pUjA in village temples?) 

https://youtu.be/8j0OVVHAQuM

Q. ஜீவாத்மா எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வது எவ்வாறு பொருந்தும்? (How apt is for jIvAthmAs to perform mangaLASAsanams to bhagavAn?)

https://youtu.be/7pbrCSGOrvg?si=cA3vzgVALcFMOXF9

Q. பெருமாளுக்கு வெள்ளை அமுது (வெறும் சாதம்) ஸமர்ப்பிக்கலாமா? (Can we offer plain rice to bhagavAn as part of naivEdhyam?)

https://youtu.be/exCSgqFUklY?si=DlJ2or604ZzOFsD-

Q. எம்பெருமானுக்கு ஏன் திருமஞ்சனம் செய்ய வேண்டும்? (Why is bathing performed for bhagavAn?)

https://youtu.be/OwxDaEw6QZg?si=K6ILljON-ooXhx36

Q. திருவாராதனத்தில் மந்த்ர புஷ்பம் என்றால் என்ன? சென்றால் குடையாம் பாசுரம் ஏன் சேவிக்கிறோம்? (What is manthra pushpam in thiruvArAdhanam? Why are we reciting “senRAl kudaiyAm” pAsuram in that?)

https://youtu.be/bN8mCOz2zF0?si=5S-vZnNlTQ5XOU9B

Q. சாளக்ராமப் பெருமாளை அரிசியில் வைத்துவிட்டு வெளியூர் செல்லலாமா? (Can we keep SALagrAma perumAL in rice and travel out of town?)

https://youtu.be/ewBcLc8NgpI?si=IOl0x7NroEWi9gXH

Q. அவரவர் இல்லத்தில் புருஷர்கள் இல்லாத காலத்திலே ஸ்த்ரீகள் சாற்றுமுறை பண்ணலாமா? (Can women perform sARRumuRai when men are not present at home?)

https://youtu.be/BK-qNS8KXcw?si=38LW9D0P-7jns3Yy

Q and A Text responses

Q. திருவாரதன சாளக்ராம மூர்த்தியை பெட்டியில்தான் வைக்கவேண்டுமா? திருவாரதனம் முடிந்தப்பின் சிறிய தட்டு அல்லது பீடத்தில் வைத்து வீட்டு பூஜை அறை அல்லது மண்டபத்தை திருக்காப்பிடலாமா?.

கோயில் ஆழ்வார் (பூஜை அறை/ஸந்நிதி) இருந்தால், அதற்குள் ஒரு தட்டில் பெருமாளை எழுந்தருளப்பண்ணலாம்.

Q. பெட்டியில் வைத்துதான் திருவாராதனம் செய்ய வேண்டும் என்றால், திருமஞ்சனம் முடிந்து தளிகை மற்றும் சாற்றுமறை வரை பூர்த்தி செய்த பின் இறுதியாக பெட்டியில் வைத்து பெட்டியை திருக்காப்பிட்டு விட்டு மண்டபத்தை காப்பிடலாமா?

Ok.

Q. குடிலில் வில்வமரம் உள்ளது. வில்வ இலைகளை பெருமாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம் பண்ணலாமா?

வில்வ இலை தாயாருக்கு உகந்ததாகச் சொல்லப்பட்டாலும், அதை ஸ்ரீவைஷ்ணவர்கள் பரவலாக உபயோகப்படுத்துவதாகத் தெரியவில்லை.

Q. அடியேன் சாலக்ராம மூர்திக்க காலையில் திருவாராதனையின் போது பால் ஹம்சையும் திருமஞ்சனம் போது பால் சேர் தும் வந்தேன் 15 வருட காலம்  இப்போது பால் ஹம்சை மட்டுமே செய்கிறேன் அடியேன் சரிதானா?

சரிதான்.

Q. இல்லத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் மற்றும் தாயார்கள் விக்ரஹங்களுக்கு (5-6 அங்குலம் அளவுள்ள) ஆராதனம் செய்கிறோம் என்றால்

1.இந்த திருமேனிகளுக்கு வஸ்திரம் அவசியம் அணிவிக்க வேண்டுமா?.

2. சாளக்கிராம மூர்த்திகளுக்கு தினமும் பாலால் திருமஞ்சனம் செய்வது என்பது கட்டாயமா? அல்லது தூய நீரால் மட்டும் திருமஞ்சனம் செய்தால் போதுமா?. 

3. தூய நீர் மட்டும் போதும் என்றால் விஷேச நாட்களில் பால் உட்பட வேறு எந்த திரவியங்கள் கொண்டு சாளக்கிராம மூர்த்தி மற்றும் விக்ரஹ ங்களுக்கு திருமஞ்சனம் செய்யலாம்?

1 -சிறு வஸ்த்ரங்களை அணிவிப்பது உசிதம்.

2-சாளக்ராம ஸ்ரீமூர்த்திகளுக்கு வெறும் சுத்த ஜலம் மட்டுமே. வேறு எதுவும் எப்பொழுதுமே கிடையாது.

3 -மற்ற த்ரவ்யங்கள் தேவையில்லை. சுத்த ஜலம் மட்டுமே உசிதம்.

Q.  திருவாராதனத்தில், “திருவடி நிலைகள் சார்த்தி அருள வேண்டும்” என்று பிரார்த்திப்பதின் பொருள் என்ன? 

எம்பெருமானை முன்னே எழுந்தருளுமாறு ப்ரார்த்திப்பது.

Q.

1.பெருமாள் திருவாராதனத்துக்கு 5 வட்டில்கள் பயன் படுத்துகிறோம்.

2. சந்தியா வந்தனதிற்கு சொம்பு அல்லது கிண்டி பயன் படுத்துகிறோம்.

3. தர்ப்பணம் முதலியவைகளுக்கு உத்தரணி இல்லாமல் டம்ளர் பயன் படுத்துகிறோம். 

அப்படியானால் உத்தரணியுடன் கூடிய பஞ்ச பாத்திரம் எப்போது உபயோக படுகிறது நமக்கு..அல்லது அதன் உபயோகமே கிடையாதா…

திருவாராதனத்தில் பெருமாளுக்கு அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் ஸமர்ப்பிப்பது, உத்தரணியைக் கொண்டே. கடைசியில் அனைவருக்கும் தீர்த்தம் கொடுப்பதும் உத்தரணியைக் கொண்டே.

Q. காப்பிடல் திருவாரதனத்தின் போது எப்போது சேவிக்க வேண்டும் ?

சேவாகாலத்தில் (பாசுரங்கள் சேவிக்கும் ஸமயத்தில்) சேவிக்கலாம்.

Q.திருப்பள்ளி எழுச்சி, கோவில் ஆழ்வாரை, திறப்பதற்கு முன் சேவிக்க வேண்டுமா, பிறகா?

இரண்டு விதமாகவும் சேவிக்கலாம். சேவித்த பிறகு கோயிலாழ்வார் திருக்காப்பை நீக்கலாம் (கதவைத் திறக்கலாம்), அல்லது திருக்காப்பு நீக்கியபின் முதலில் சேவிக்கலாம்.

Q. திருப் பல்லாண்டு கோவில் ஆழ்வாரை திறந்த பிறகும் சேவிக்கலமா சுவாமி? ஒரு வேளை சேவிக்கலாம் என்ற பக்ஷத்தில் தனியன் களுடன் சேர்த்து சேவிக்க வேண்டுமா

சேவாகாலத்தில் (பாசுரங்கள் சேவிக்கும் ஸமயத்தில்) தனியன்களுடன் சேவிக்கலாம்.